#BIG NEWS:- சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி..!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யூ-டியூப் சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 6-ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதி பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்ஜி மதன், முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். இதற்கு, சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டாா். சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.