1. Home
  2. தமிழ்நாடு

பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு.. 2025-ல் நிச்சயம் இது நடக்கும்?

1

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார்.அவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளைப் பற்றி கூறியது பல முறை உண்மையாகியுள்ளது. 

பாபா வாங்கா 2025-ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகளாவிய நிதி நெருக்கடியை முன்னறிவித்துள்ளார். இது பல நாடுகளை மந்தநிலைக்குத் தள்ளும். பணவீக்கம், எரிசக்தி நெருக்கடிகள் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் பல நாடுகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

ஜூலை மாதம்

ஜூலை மாதம் என்பது வரலாறு, வானியல் மற்றும் தீர்க்கதரிசனம் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு அபசகுன அறிகுறியைக் கொடுக்கும் மாதமாகும் என பல தீர்க்க தரிசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பல தசாப்தங்களுக்கு முன்பு பாபா வங்கா கூறியது இப்போது உண்மையாகி வருவதாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.தற்போது ஜூலை மாதம் சனி வக்கிர கதியில் செல்கிறது, அதுவும் குரு ராகுவில் அஸ்தமிக்கிறார்.இந்த நேரத்தில் தான் கெட்ட சக்தி அதிகமாகிறது என பல ஜோதிடங்களில் அனுபவமுள்ளவர்கள் குறிப்பிட்டு வைத்துள்ளனர்.இது தவிர சனியின் செல்வாக்கால் பயங்கரமான இயற்கை பேரழிவுகள் உட்பட பல்வேறு சம்பவங்கள் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

இந்த அழிவுகளில் தப்பிப்பிழைப்பவர்கள் மட்டுமே முன்னேறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.ஐரோப்பிய கண்டத்துடனான மோதல் அந்த நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும்.

குரு மிதுன ராசியில் அஸ்தமிக்கும்போது, நெறிமுறைகள், மதம், ஞானம் மற்றும் தலைமைத்துவம் பலவீனமடைகின்றன. குரு அஸ்தமிக்கும்போது, சமூகம் திசையற்றதாகிறது. இதனடிப்படையில் பாபா வங்காவும் இந்த 2025ம் ஆண்டு பெரிய விபத்துக்கள் மற்றும் மக்களின் அதிக இறப்பு என்பதை குறிப்பிட்டு இருந்தார். இது என்னதான் வேறு நாட்டவர்களும் வேறு யாரும் குறிப்பிட்டு இருந்தாலும் ஏதோ ஒரு கெட்ட சக்தியை அனைவரும் குறிப்பிட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் கவனத்துடனும் இருப்பது அவசியம் என்பதே இப்பதிவின் கருத்து.

பாபா வாங்கா 2028ஆம் ஆண்டில் வெள்ளியில் ஆற்றலைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 2033-ஆம் ஆண்டுக்குள் துருவப் பகுதிகளில் கடல் மட்டம் உயரும். 2130-ஆம் ஆண்டில் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் இணைவார்கள். 3005-ஆம் ஆண்டில் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு போர் இருக்கும்.

பாபா வாங்கா 2043-ஆம் ஆண்டுக்கான முக்கிய கணிப்பில், ஐரோப்பா முஸ்லிம் ஆட்சிக்கீழ் வரும் என்று கூறினார். இதனால், முஸ்லிம் சமூகம் ஐரோப்பாவில் பெரும் அரசியல் அதிகாரம் பெறும்.

Trending News

Latest News

You May Like