பாபா வங்கா கணிப்பு : ஜூலையில் பெரிய சுனாமி தாக்கும்..!

பாபா வங்க கணித்த 2001 அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், கொரோனோ வைரஸ் ஆகியவை உண்மையில் நடந்துள்ளன.
இவரை போன்று ஜப்பானின் பாபா வங்கா என்றழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண் வரும் ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகையே புரட்டிப்போடும் சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று கனவு மூலம் முன்கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி உலகில் நடக்க இருப்பதை விசித்திரமான முறையில் முன்கூட்டியே கணித்து வருகிறார். மங்கு கலை ஓவியரான ரையோ தத்சுகி, தான் கனவுகளின் காணும் சம்பவங்களை ஓவியமாக வரைந்து வருகிறார். 1980 முதல் அவர் கனவுகளை வரையத் தொடங்கிய நிலையில், அவை அனைத்தும் நடந்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
உலகில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களோடு ரையோ தத்சுகியின் ஓவியங்கள் ஒத்துப்போகின்றன. 1991 ஃபிரெட்டி மெர்குரியின் மரணம், 1995 கோபே நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டு ஜப்பானின் சுனாமி போன்றவற்றை முன்கூட்டியே கனவுகளாக கண்டு ரையோ தத்சுகி ஓவியமாக வரைந்த நிலையில், அவை அனைத்தும் உண்மையாகியுள்ளன.
இந்த நிலையில் தான் தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ரையோ தத்சுகி ஓவியம் வரைந்திருக்கிறார். அதாவது ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும் ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சுனாமியால் பாதிக்கப்படுவதை ரையோ தத்சுகி முன்கூட்டியே பார்த்துள்ளதாவும் அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர்.