பி. சங்கர் மறைவு! முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!
தமிழ்நாட்டின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த பி. சங்கர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்யாறு உதவி ஆட்சியராக பணியை பி. சங்கர் தொடங்கினார். பின்னா் தனது நேர்மை, பணிகளால் உயரிய பதவிகளுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இவர் தமிழகத்தின் முன்னாள் முதன்மை செயலாளராகவும் பதவி வகித்தவா். பி. சங்கர் 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவா் ஆவார். அவர் திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக முக ஸ்டாலின் தனது வலைத்தள பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். பி. சங்கர் ஒன்றிய திட்டக்குழுவின் செயலாளராகவும், ஒன்றிய விழிப்புணர்வு ஆணைய தலைவராகவும் பணியாற்றிவா் ஆவார்.
"தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான திரு. பி.சங்கர் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 3, 2024
திரு. பி.சங்கர் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்"… pic.twitter.com/2DB7kvAfgV