1. Home
  2. தமிழ்நாடு

திருச்சானூர் பத்மாவதி கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி..!

1

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவம் வரும் 10- ம் தேதி தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (7-ம்தேதி) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெற உள்ளது. 

அன்று அதிகாலை தாயாருக்கு சகஸ்ரநாமார்ச்சனை நடக்கிறது. அதை தொடர்ந்து காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கோயில் வளாகம், சுவர், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்படும். 

பிறகு நாம கட்டி, திருச்சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைகற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். 

அதன் பின்னர், காலை 9.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக குங்குமார்ச்சனை சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசனங்களை ரத்து செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like