1. Home
  2. தமிழ்நாடு

இந்த தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் மக்கள் தரிசிக்க அனுமதி..!

1

அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ  ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள்,  தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை  பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி  நடைபெற்று வந்தாலும், அதே சமயம் நேரில் காண வாய்ப்பில்லா மக்கள் நேரடியாக விழா சம்பவங்களை காணும் வசதியும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.  

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் இறைச்சிக்கடை மற்றும் மதுபான கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் வரும் 16 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் ராம் லல்லாவை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like