1. Home
  2. தமிழ்நாடு

அயோத்தி எல்லைகள் மூடப்பட்டன..!

1

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் நேற்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முதல் நாளான நேற்று ராமரை தரிசனம் செய்ய போட்டி போட்டுக்கொண்டு மக்கள் அதிகாலை 3 மணிக்கே குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

இந்தநிலையில், ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதையடுத்து அயோத்தி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அயோத்திக்கு செல்லும் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன.

ராமர் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அயோத்தி தாமுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று உத்தரப் பிரதேச காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்திக்கு வரும் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படுகின்றன. மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களும் அயோத்திக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான பக்தர்கள் வருவதால், கோவில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நிதானத்தை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் இதுவரை 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like