1. Home
  2. தமிழ்நாடு

பகீர் வீடியோ..! கட்டுப்பாட்டை இழந்து 15 முறை உருண்டு விபத்துக்குள்ளான கார்..!

1

பெங்களூருவை அடுத்த யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் மவுலா அப்துல்(35). இவர் தமது இரு மகன்கள் ரகுமான்(15), சமீர் (10), மனைவி சலிமா பேகம் (31), மாமியார் பாத்திமா(75), மற்றொரு மகன் உசேன் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

சித்ரதுர்கா மாவட்டம் சாலகெரே மற்றும் பெல்லாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அவரது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் விபத்தில் சிக்கியது. சாலை தடுப்பில் மோதிய அந்த கார், 15 முறை கரணமடித்து உருண்டது.
 

அப்போது காரில் இருந்த சிலர் அந்தரத்தில் பறந்து சாலையில் விழுந்தனர். விபத்தில் மவுலா அப்துல் மற்றும் அவரது 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். உடன் இருந்த மற்றவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

விபத்தை அறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
 

சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள இந்த வீடியோவில் சாலை தடுப்பில் கார் மோதுவது தெளிவாக தெரிகிறது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து அந்த கார் 15 முறை கரணமடித்துள்ளது. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. விபத்தில் சிக்கி கார் உருளும் போது அதில் இருந்த 2 பேர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


 

Trending News

Latest News

You May Like