1. Home
  2. தமிழ்நாடு

அசத்தல் திட்டம்..! இனி ஒரே நாளில் காஞ்சிபுரம் கோவில்களை தரிசிக்கலாம்..!

1

ஆயிரம் கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்துச் செல்வதற்காக டூர் பேக்கேஜ் ஒன்றை தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுவும் வெறும் ரூ.1000 கட்டணத்தில், ஒரே நாளில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், முட்டுக்காடு போட் ஹவுஸ் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
 

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், அர்ஜூனன் தவம் செய்த இடம், பஞ்ச ரதங்கள், வெண்ணெய் உருண்டை, முட்டுக்காடு போட் ஹவுஸ் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதற்கு ஒரு நபருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 

சென்னையில் இருந்து தினமும் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம், முட்டுக்காடு போட்டிங், முருக தோட்டம் எக்கோ பூங்கா ஆகிய இடங்களுக்கு பஸ்சில் அழைத்துச் சென்று விட்டு, இரவு 7 மணிக்கு மீண்டும் சென்னையில் வந்து இறக்கி விட்டு விடுவார்கள். வால்வோ ஏசி, ஏசி, ஏசி அல்லாதது என மூன்று வகையான பஸ் பயணங்கள் உள்ளன. அவரவர்களின் வசதிக்கு ஏற்ப இந்த பஸ் பயணத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.1000 கட்டணத்தில் பஸ் கட்டணம், உணவு, தரிசன டிக்கெட் ஆகியவற்றிற்கான செலவுகள் அடங்கி விடும்.

காலை 06.30 மணிக்கு சென்னை சுற்றுலாத்துறை வளாகத்தில் இருந்து புறப்பட்டு, 09.10 மணிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைக்கிறார்கள். தரிசனம் முடித்ததும் 09.40 மணிக்கு காஞ்சிபுரத்தில் காலை உணவு, 10.20 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம், 10.50 மணிக்கு கைத்தறி பட்டுப்புடவை ஷாப்பிங், பகல் 01.30 மணிக்கு பஞ்ச ரதங்கள், 02.10 மணிக்கு மாமல்லபுரம் கடற்கரை கோவில், 03.15 மணிக்கு மாமல்லபுரத்தில் மதிய உணவு, மாலை 04.15 மணிக்க முட்டுக்காடு போட் ஹவுஸ் அழைத்து சென்று விட்டு, இரவு 7 மணிக்கு சென்னை சுற்றுலாத்துறை வளாகத்தில் பயணம் நிறைவடையும்.

ஒரு நாள் முழுவதும் மன நிறைவாக கோவில்களுக்கும், அதே சமயம் ஜாலியாக ஊர் சுற்றி பார்த்து விட்டும் வருவதற்கு ஏற்றதாக, பெரியவர் முதல் சிறுவர்கள் வரை விரும்பும் வகையில் இந்த டூர் பேக்கேஜை தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது. விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் ஒரு நாள் முழுவதும் வெளியில் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இது மிகவும் உதவியானதாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like