அசத்தல் அறிமுகம்..! டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நவீன பான்கார்டு 2.0..!
நிதி பரிவர்த்தனை தொடர்பான அத்தனை நடவடிக்கைகளுக்கும் பான் கார்டுதான் தனி அடையாளமாக பயன்படுத்தபப்ட்டு வருகிறது. ஒருவர் ஒரு பான் அட்டை மட்டும்தான் வைத்திருக்க முடியும்.
இப்படி நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பான் அட்டையில் பல்வேறு நவீன அம்சங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பான் அட்டை 2.0 என்ற அடையாளத்துடன் நவீன அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நவீன அட்டையில் க்யூ ஆர் கோடு இடம் பெற்றிருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் பான் அட்டையில் எண், எழுத்து என இரண்டும் கலந்து 10 இலக்க அடையாளக் குறியீடாக இருக்கும். இதே நடைமுறை நவீன பான் அட்டை 2.0 -வில் க்யூஆர் கோடாக மாற்றப்படுகிறது.
இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட இலகுவான டிஜிட்டல் சேவை கிடைப்பதுடன் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த ரூ.1,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. .
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பழைய பான் அட்டையை மேம்படுத்தி, டிஜிட்டலாக நவீன பான் கார்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பான் 2.0 கூறும் போது, 'காகிதமின்றி முழுவதும் ஆன்லைனில் பிரத்யேக இணையத்தளம் வாயிலாக இதனை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த மையமாக இது இருக்கும்' எனவும் கூறியுள்ளார். புதிய பான் கார்டு வாங்கினால், பழைய அட்டை செல்லுப்படியாகதா என்பதை நினைத்து பயனாளர் கவலைப்பட வேண்டாம். தற்போதுள்ள பான் கார்டுகளில் உள்ள எண்களுக்கு பதிலாக க்யூ.ஆர்.கோடுடன் புதிய கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனை இலவசமாக டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.