1. Home
  2. தமிழ்நாடு

பெண் காவல் ஆளிநர்ளுக்கு விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி !

பெண் காவல் ஆளிநர்ளுக்கு விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி !


சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும் மன மகிழ்வுடனும் பணிபுரிய யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பேராசிரியராக பணிபுரியும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் டாக்டர். வனீதா அகர்வால், திருமதி. நிறித்யா ஜெகந்நாதன், இயக்குநர், கிருஷ்ணமாச்சாரியா யோகா மந்திரம், திருமதி.ரிங்கு மெச்சேரி, தலைவர், யோகா பயிற்சியாளர் ஆண்டாள் ஆகியோருடன் இணைந்து காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக யோகா பயிற்சியினை இணையதளம் மூலமாக 19.09.2020 அன்று துவக்கி வைத்து, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இணையதளம் வாயிலாக யோகா மற்றும் பிராணயாமா மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், 7-ம் கட்டமாக வழங்கப்பட்ட யோகா பயிற்சியில் 1,350 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த பயிற்சியை, டாக்டர்.வனீதா அகர்வால், காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு எந்த நேரத்திலும் பணிபுரிய ஏதுவாகவும் இந்த யோகா பயிற்சியை பிரத்தியோகமாக ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like