1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கனிமொழி எம்.பி!

1

கனிமொழி எம்.பி. தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கோவை பொள்ளாச்சியில் தனியார் பள்ளி ஒன்றில், பருவம் எய்திய மாணவியை வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி தரையில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. அறிவியல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியைக் கொஞ்சம் கூட பகுத்தறிவின்றி நடத்தியுள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இதில் தொடர்புள்ள ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like