பெரும் விபத்து தவிர்ப்பு..! கன்னியாகுமரி-மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி..!

பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரில் இருந்து மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இரணியல் ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அபோது ரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் என்ஜின் ஆப்ரேட்டர் சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயிலில் இருந்து கீழே இறங்கிய ரயில் ஓட்டுநர் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், போலீசார் விரைந்தனர். இதனையடுத்து தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றியதை அடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.
கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்ற நபர் யார் என்பது குறித்தும் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.