1. Home
  2. தமிழ்நாடு

கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்... கனிமொழி அட்வைஸ்!

Q

நேற்று நடைபெற்ற விமானப்படை சாகசத்தை நேரில் கண்டு ரசிக்க 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. ஏற்பாடுகள் செய்ததில் குளறுபடி, சுட்டெரிக்கும் வெயில், ஒரே நேரத்தில் மக்கள் வெளியேறிய போது போதிய பாதுகாப்பு வசதியின்மை, குடிநீர் வசதியின்மை, வீடு திரும்பவும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பொதுமக்கள் சமாளிக்க முடியாத கூட்டங்கள் கூடுவதையும் இனி தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like