1. Home
  2. தமிழ்நாடு

பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு...32 தொழிலாளர்கள் மீட்பு!

1

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் ஆன்மீக தலங்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது உத்தரகாண்ட் சமோலி மாவட்டம் பத்ரிநாத் அருகே தேசிய நெடுஞ்சாலை துறை மானா-காஸ்டோலி இடையே புதிதாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வழக்கம் போலஇன்று பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 57 பணியாளர்கள் பனிக்கட்டிகளில் சிக்கி உள்ளனர். தொழிலாளர்களை பனிக்கட்டிகள் மூடிய நிலையில் 10 தொழிலாளர்கள் இதுவரை மீட்கக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 47 பேரை மீட்கும் பணியில் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் இந்திய விபத்து எல்லை போலீஸ், மாவட்ட நிர்வாகம் எல்லை சாலை அமைப்பு குழு ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது வரை மீட்கப்பட்ட 32 தொழிலாளர்கள் ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தற்போது மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் உத்தரகாண்ட் அரசு உதவிக்காக உதவி எண்களை வெளியிட்டுள்ளது:

மொபைல்: 8218867005, 9058441404
தொலைபேசி: 0135 2664315
கட்டணமில்லா எண்: 1070

பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதி வரை உத்தரகண்டிற்கு 20 செ.மீ வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சமோலியில் தொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமோலியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை உள்ளிட்ட பலரால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like