1. Home
  2. தமிழ்நாடு

மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் குடிநீர் தானியங்கி மையம் திறப்பு..!

Q

மெரினா நீச்சல் குளம் அருகே அமைக்கப்பட்டிருந்த தானியங்கி குடிநீர் இயந்திரத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 50 இடங்களிலும் சேவையை தொடங்கும் வகையில், திட்டத்திற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
தானியங்கி இயந்திரத்தில் இருந்து குடிநீரை பிடித்து, அதை குடித்துப் பார்த்தார்.
இயந்திரத்தில், 150 மில்லி லிட்டர், 1 லிட்டர் குடிநீர் பெறும் வகையில், இரண்டு பொத்தான்கள் உள்ளன. தேவைக்கேற்ப பொத்தானை அழுத்தி, டம்பள் அல்லது பாட்டிலில் குடிநீரை பிடித்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.
குடிநீர் விநியோக குழாயிலிருந்து, 3,000 முதல் 9,000 லிட்டர் கொள்ளவு கொண்ட, சின்டெக்ஸ் டேங்குகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. பின், அல்ட்ரா வடிகட்டல், கார்பன் வடிகட்டல் மற்றும் புறஊதாக்கதிர் வாயிலாக சுத்திகரிப்பு நடக்கிறது.
பின், துருப்பிடிக்காத சில்வர் டேங்குகளில் குடிநீர் மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில், இயந்திரத்தில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
இயந்திரங்கள் ஆன்லைன் செயலி வாயிலாக செயல்படுவதால், டேங்குகளில் குடிநீர் அளவு குறையும்போது உடனடியாக பகுதி பொறியாளருக்கு தகவல் செல்லும்; தானியங்கி முறையில் தண்ணீர் நிரப்பும் வசதியும் உள்ளது.
இயந்திரங்கள் பாதுகாப்பு கருதி, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தை பராமரிக்க, மூன்று ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like