1. Home
  2. தமிழ்நாடு

மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள்..!

Q

மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், இந்த தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மாநகரப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் நின்றபடியும், கம்பிகளில் தொங்கியபடியும் பயணம் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் விபத்துகள் நேரிடுவதால், அதனைத் தவிர்க்க மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் என, மாநகர பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எனினும், பேருந்து படிக்கட்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனவே, படிக்கட்டு பயணத்தை முழுமையாக தடுக்கும் வகையில், கதவுகள் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளை அடையாளம் கண்டு, தானியங்கி கதவுகளை பொருத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
அதன்படி இதுவரை, 448 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவு: பயணியர் பாதுகாப்பு கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 448 பேருந்துகளில் கதவுகள் இல்லை என கண்டறியப்பட்டது.
இதையடுத்து முதல்கட்டமாக 200 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 248 பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன

Trending News

Latest News

You May Like