1. Home
  2. தமிழ்நாடு

ட்ரெண்டிங் ஆட்டோ டிரைவருக்கு போலீசார் செக்..! இனி மாசம் 8 லட்சம் சம்பாதிக்க முடியாது..!

1

ரகுல் ரூபானி என்பவர் அண்மையில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளார். அங்கே அவரது பை மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவற்றை வைக்க லாக்கர் வசதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று திகைத்து போன அவரை ஒரு ஆட்டோ ஓட்டுநர் தொடர்பு கொண்டு நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள், இவற்றை பாதுகாப்பாக வைத்திருந்த ஒப்படைக்க ஆயிரம் ரூபாய் கட்டணம் என கூறியுள்ளார்.


இதனை ரகுல் ரூபானி தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட அது சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ஆட்டோ ஓட்டுநரின் புத்திசாலித்தனத்தை பலரும் பாராட்டினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே தன்னுடைய ஆட்டோவை நிறுத்தி வைத்து ஆட்டோ ஓட்டாமலேயே ஒரு நபர் சம்பாதிக்கிறார் என இவர் பிரபலமானார். 


இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 லட்சம் வரை வருமானம் இவருக்கு கிடைக்கிறது என பலரும் இவரின் தொழில் ஐடியாவை டிரெண்டாக்கினர். ஆனால் சமூக வலைதளங்களில் கிடைத்த புகழ் இவரது தொழிலுக்கே ஆப்பு வைத்துள்ளது. மும்பை காவல்துறையினர் அந்த ஆட்டோ ஓட்டுனர் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் அமெரிக்க தூதரத்துக்கு வெளியே உடைமைகளை பாதுகாக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி அவரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் இந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே எந்த வாகனங்களையும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது, ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை கொண்டு வந்து விட்டு மீண்டும் அவர்களை திரும்ப அழைத்து செல்லும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள் என காவல்துறையினர் விளக்கம் தந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like