ஆண் குழந்தைக்கு அப்பாவானார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்..!

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின் பவுலராக வலம் வருபவர் கிளென் மேக்ஸ்வெல். 2010-ம் ஆண்டில் பிக் பாஷ் தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடத் தொடங்கியபோது அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் 2,159 ரன்களையும் குவித்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20-ல் 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல்லின் பேட்டிங் கவனம் பெற்றது.
இதனிடையே மேக்ஸ்வெல்லும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்ட நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியிருந்தார். அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். குழந்தைக்கு லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என பெயரிட்டுள்ளார். இவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.