1. Home
  2. தமிழ்நாடு

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

1

ஆடி மாதத்தில் மாரியம்மன் கோயில்களில் 22 நாட்கள் ஆடிப் பெருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஜூலை 23ஆம் தேதி ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள், அம்மனுக்கு அலங்காரங்கள் நடைபெறும். குறிப்பாக ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பொங்கல், மாவிளக்கு வைத்தல், உருளுதண்டம், பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.
 

அந்த வகையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி புதன் கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதே சமயம் மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் உட்படாது என்பதால் சேலம் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்பட்ட உள்ளூர் விடுமுறை நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக் கிழமை, வேலை நாளாக செயல்படும் என, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like