1. Home
  2. தமிழ்நாடு

பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஆடிட்டர் குருமூர்த்தி..!!

1

டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியுமான நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிராக ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது.

ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு தடை விதித்ததை அடுத்து இந்த ட்வீட் வெளியிடப்பட்டது. 

அதில்,  நீதிபதி முரளிதர் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரத்திற்கு ஜூனியரா இருந்தாரா என்று குருமூர்த்தியின் ட்வீட் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வழக்கறிஞர் சங்கத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு குருமூர்த்திக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கத் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ப.சிதம்பரத்திற்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும், அவர் தனது ஜூனியராக பணிபுரிந்ததில்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெளிவுபடுத்தினார்.

மேலும் குருமூர்த்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ட்வீட்களையும் குருமூர்த்தி நீக்கியதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி குருமூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிரான அவரது ட்வீட் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like