ரயில் பயணிகள் கவனத்திற்கு..! இனி இத்தனை கிலோ லக்கேஜ் மட்டுமே அனுமதி..!

ரயிலில் பயணிக்கும் பயணிகள் மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக லக்கேஜ்களை கொண்டு வருகிறார்கள். இதனால் ரயில்களில் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவதோடு ரயில்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் லக்கேஜ்களை கொண்டு செல்ல தெற்கு ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் படி ஏசி முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், 2ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏசி மூன்றாம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும் , முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும் எடுத்து செல்லலாம். மேலும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல வெடிபொருட்கள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் கொண்டு சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.