1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு..! ஆகஸ்ட் 1 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்!

1

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்கப்படுகிறது.இந்த நிலையில் தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்படுத்துதல் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதால் தாம்பரம் வழியாக வரும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தாம்பரம் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 1 முதல் 17ஆம் தேதி வரையும், நாகர்கோவில் தாம்பரம் இடையே இயக்கப்படும். அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் திரையில் தாம்பரம் எழும்பூர் இடையே புறநகர் ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 14, 15, 16 ஆம் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் நெல்லை, பொதிகை, பாண்டியன், முத்துநகர், சிலம்பு, அனந்தபுரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த சிக்னல் பணிகள் முடியும் வரை முப்பது நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

மேலும் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் வரும் மட்டுமே இயக்கப்படும். தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு புறப்படும் இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like