1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு..! மொத்தம் 28 ரயில்கள் ரத்து..!

1

டானா புயல், தீவிர புயலாக உருமாறி 120 கி.மீ வேகத்தில் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு, அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர புயல் அறிவிப்பு காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

தெற்கு ரயில்வே 28 ரயில்களை முன்னெச்சரிக்கை காரணமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

* பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து நாளை காலை ஹவுரா புறப்பட வேண்டிய ரயில் ரத்து

* நாளை மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு ஷாலிமார் செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து

* நாளை அதிகாலை நெல்லையில் இருந்து புறப்பட்டு புருளியா செல்ல வேண்டிய அதிவிரைவு ரயில் ரத்து

* நாளை நண்பகல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சந்திராகச்சி செல்லும் சிறப்பு ரயில் ரத்து

* நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* நாளை மறுநாள் ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து

* நாளை மறுநாள் திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து

* திப்ரூகரில் இருந்து நாளை புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வர வேண்டிய ரயில் ரத்து

* கன்னியாகுமரியில் இருந்து நாளை மாலை புறப்பட்டு திப்ரூகர் செல்ல -வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து

* நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில் ரத்து ரயில்வே

* நாளை மறுநாள் ஷாலிமாரில் இருந்து சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது

* நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் ரத்து

* நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து சந்திராகச்சி செல்ல வேண்டிய விரைவு ரயில் ரத்து

* தாம்பரத்தில் இருந்து நாளை பிற்பகல் புறப்பட்டு சந்திராகச்சி செல்ல வேண்டிய சிறப்பு ரயில் ரத்து

* 24-ம் தேதி காரக்பூரிலிருந்து பிற்பகல் 2.05க்கு விழுப்புரம் புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

* 24-ம் தேதி ஷாலிமரிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும் ரயில் ரத்து

* 24-ம் தேதி ஹவுராவிலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like