கோவை மருதமலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு ...

மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்ச் 2013ம் ஆண்டில் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கடுத்து 12 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வரும் ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கோவில் அறங்காவலர் குழுவினரும் செய்துவருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி (வெள்ளி) முதல் 6ம் தேதி (ஞாயிறு) வரை மலை மீது பக்தர்கள் வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. அதற்கு பதிலாக பக்தர்கள் படி வழியாகவும், திருக்கோவில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் ராஜகோபுரத்தின் மீது 'ஓம்' என்ற எழுத்தும், அதன் மேலே 'வேல்' வடிவம் கொண்ட அலங்கார மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுவருகிறது.