1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்கள் கவனத்திற்கு..! இன்று மாலை வரை புறநகர் ரயில் சேவை ரத்து..!

1

சென்னையில் இன்று மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று காலை 5:10 முதல் மாலை 4:10 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதை அடுத்து பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.பராமரிப்பு பணி காரணமாகவே புறநகர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like