1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்கள் கவனத்திற்கு.. துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..!

1

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 94.56 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.அதேபோல் 5.44 சதவிகித மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்கும் வகையில் துணைத் தேர்வு நடத்தப்படும்.

அந்த துணைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் இதே விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, துணைத் தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 1ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.ல் அதேபோல் பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2

ஜூன் 24ஆம் தேதி மொழித் தேர்வு

ஜூன் 25ஆம் தேதி  ஆங்கிலத் தேர்வு

ஜூன் 26ஆம் தேதி  பயோ-கெமிஸ்ட்ரி, கம்யூனிகேட்டர் ஆப்ங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், பேசிக்ஸ் எலக்ரிக்கல் இஞ்சினியரிங்.

ஜூன் 27ஆம் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல் தேர்வு

ஜூன் 28ஆம் தேதி இயற்பியல், எகமானிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வும் நடக்கவுள்ளது.

ஜூன் 29ஆம் தேதி பயோலஜி, தாவரவியல், வரலாறு, பிசினஸ் மேக்ஸ், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ், பேசிக் மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் டென்காலஜி தேர்வுகள் நடக்கவுள்ளது.

கடைசியாக ஜூலை 1ஆம் தேதி கணக்கு, விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயோலஜி, டெக்ஸ்டைல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், அக்ரிகல்சிசுரல் சயின்ஸ், நர்சிங் ஆகிய தேர்வுகள் நடக்கவுள்ளது.

1

1

Trending News

Latest News

You May Like