விவசாயிகள் கவனத்திற்கு..! அடையாள எண் பெற நாளை கடைசி நாள்..!

ஆதார் எண் போல விவசாயிகளுக்காக தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள், பதிவு, நிலம், பயிர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்காக விவசாயிகளுக்கு பட்டா சிட்டாக்களை ஆராய்ந்து அதற்கான எண் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் மத்திய அரசு, மாநில அரசு திட்டங்களை எளிதாகப் பெறுவதற்கு, மத்திய அரசு ஆண்டுக்கு 6,000 ரூபாயை, 2,000 என்று மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு வழங்குகிறது. அதே போல, பயிர்கள் பாதிக்கப்பட்டால் பயிர் காப்பீடு கொடுக்கப்படுகிறது. இது போன்ற சலுகைகளைப் பெறுவதற்காக கடந்த மாதம் தமிழக அரசு எல்லா மாவட்டங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
அதாவது, விவசாயிகள் தங்கள் சிட்டா அடங்கள், ஆதார் அட்டை இரண்டையும் வைத்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு விவசாயிகளுக்கு ஒரு எண் கிடைக்கும். அந்த எண்ணை வைத்துதான் பெரும்பாலான சலுகைகளைப் பெற முடியும் என்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
ஆனால், பல மாவட்டங்களில் விவசாயிகள் முறையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், பல விவசாயிகள் தங்கள் முன்னோர்கள் பெயரில் இருந்த நிலங்களை தங்கள் பெயரில் மாற்றி விணப்பிக்க தாமதமானது. அதனால், விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால், விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற நாளை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், விவசாயிகள் இந்த காலக்கெடுவை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.