1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்கள் கவனத்திற்கு..! +1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ம் தேதி வெளியீடு..!

1

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , நடைபெற்று முடிந்த மார்ச் 2025, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி எழுதி, விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் நோடிபிகேஷன் என்ற பகுதியில் 30.06.2025 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் முதல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like