1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீக பிரியர்கள் கவனத்திற்கு..! தமிழ்நாட்டில் இருக்கும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்லலாம் வாங்க..!

1

ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐஆர்சிடிசி உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. வருகிற ஜூலை 28, 2025 அன்று பதான்கோட் கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து 'பாரத் கௌரவ்' (IRCTC Bharat Gaurav train) சிறப்பு சுற்றுலா ரயிலை அனுப்ப உள்ளது. இந்தப் பயணம் 13 பகல் மற்றும் 12 இரவுகளைக் கொண்டது, இதில் பயணிகள் திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் மல்லிகார்ஜுனர் கோயில் போன்ற நாட்டின் புனித யாத்திரைத் தலங்களைப் பார்வையிட வாய்ப்பை பெறுவீர்கள்.

இருக்கை வகுப்புகள் மற்றும் கட்டணங்கள் (ஜிஎஸ்டி உட்பட)

எகனாமி வகுப்பு (ஸ்லீப்பர்) - ஒரு நபருக்கு ரூ.30,135/- (640 இருக்கைகள்)

ஸ்டாண்டர்ட் வகுப்பு (3AC) - ஒரு நபருக்கு ரூ.43,370/- (70 இருக்கைகள்)

கம்ஃபோர்ட் வகுப்பு (2AC) - ஒரு நபருக்கு ரூ.57,470/- (50 இருக்கைகள்)

இந்த (tour package) ரயில் டிக்கெட்டுகளில், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, ஏசி/ஏசி அல்லாத பேருந்துகளில் உள்ளூர் பயணம், தங்குமிடம், விமானப் பாதுகாப்பு, துணை மருத்துவ மற்றும் சுற்றுலா துணை ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்.

இந்த ரயில், கான்ட், ஜலந்தர் நகரம், லூதியானா, சண்டிகர், அம்பாலா கான்ட், குருக்ஷேத்ரா, கர்னால், பானிபட், சோனிபட், ஹஸ்ரத் நிஜாமுதீன், மதுரா, ஆக்ரா கான்ட் மற்றும் குவாலியர் போன்ற முக்கிய நிலையங்களில் இருந்து பயணிகளை ஏறவும், இறங்கவும் அனுமதிக்கும்.

டூர் பேக்கேஜில் என்னென்ன வசதிகளை நீங்கள் பெறுவீர்கள்?

உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு

ஏசி அல்லாத ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் வசதியான இருக்கை

பேருந்தில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா

பணியாளர், வீட்டு பராமரிப்பு, முதலுதவி வசதி

தென்னிந்தியாவின் முக்கிய மதத் தலங்களை மலிவு விலையில் ஒன்றாகப் பார்வையிட விரும்பும் பக்தர்களுக்கு இந்த யாத்திரை ஒரு சிறப்பு வாய்ப்பாகும்.

குறைந்த இருக்கைகள்
இந்தப் பயணத்திற்கான இருக்கைகள் குறைவாகவே இருக்கும் நிலைதில் பயணிகள் www.irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் உடனடியாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம் அல்லது பின்வரும் எண்களை அழைக்கலாம்: 9717648888, 9717641764, 7827970027, 8595924209, 8287930712, 8287930686 அல்லது நீங்கள் IRCTC சுற்றுலா வசதி மையம், புது டெல்லி ரயில் நிலையம், பிளாட்ஃபார்ம் எண். 16 (அஜ்மேரி கேட் பக்கம்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like