1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! பஸ் பாஸ் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

1

வெயிலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் வரும் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.. மேலும் முதல் நாளே அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் இருந்து மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.இதேபோல் சீருடை, நோட்டுகள், காலணிகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை படிப்படியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் என்பது மிகவும் அவசியமானது. கல்வி கற்பதில் தூரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கியதும் மாணவ, மாணவிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு, உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு போக்குவரத்து கழகத்திடம் வழங்கப்படும். அவர்கள் இலவச பஸ் பாஸை அச்சிட்டு வழங்குவர். அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு எப்போது பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2024 ஜுன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் 2023-24ல் வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையெனில் பள்ளிச் சீருடையுடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கு பஸ் பாஸ் வந்துவிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like