1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு..! வாட்ஸ்அப்-ல் Hi அனுப்பினால் போதும்..!

1

 சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் Swami Chatbot என்ற புதிய மொபைல் ஆப்பை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஐயப்பன் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக இந்த ஆண்டு பல மாற்றங்களும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக பக்தர்களின் வசதிக்காக உணவு, தங்குமிடம், மருத்துவம், கோவிலில் நடைபெறும் பூஜை விபரம், கோவில் திறந்திருக்கும் நேரம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்வதற்காக புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் இந்த ஆப் தற்போது ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என ஆறு மொழிகளில் சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவில் திறந்திருக்கும் நேரம், பிரசாதம் இருப்பு, பூஜை நடைபெறும் நேரம், அருகில் இருக்கும் கோவில்கள், அந்த கோவில்களுக்கு செல்லும் வழி, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், போலீஸ் அவசர சேவை அழைப்புகள், தீயணைப்பு, மருத்துவ சேவை, வனத்துறை, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களும் இந்த ஒரே ஆப்பில் கிடைக்கும் வகையில் Swami Chatbot ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.



சபரிமலை ஐயப்ப பக்தர்கள், https://tinyurl.com/2843fjha என்ற இணையதளத்திற்கு சென்று Swami Chatbot ஆப்பினை டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது தவிர 6238008000 என்ற எண்ணிற்கு ஹாய் என வாட்ஸ்ஆப் மூலமாக தகவல் அனுப்பினாலே சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற முடியும்.


 


 

Trending News

Latest News

You May Like