1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களே கவனம்... பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்..!

1

கோவை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது; 1077 மற்றும், 0422 - 2306051 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
 

அவசர கட்டுப்பாடு மைய எண்: 0422 - 2302323, வாட்ஸ்அப் எண்: 81900 00200
 

அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து, வீடுகளில் இருக்க வேண்டும்.
 

அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும் அல்லது உறுதியாக நிலை நிறுத்த வேண்டும். விளம்பர பலகைகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும்.

நீர் நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, நீந்தவோ, மீன் பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ மற்றும் செல்பி எடுக்கச் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
 

ஆற்றங்கரைகள் மற்றும் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மழைக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
 

உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின் கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்; மின் சாதனப் பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். பழுதடைந்த, சிதிலமடைந்த கட்டடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
 

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், வீட்டுக்குள் தண்ணீர் சூழ்ந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்பும் பட்சத்தில், 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
 

தரைப்பாலங்கள் வெள்ளநீர் செல்லும்போது, அவ்வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வால்பாறை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, அணைக்கட்டுகள், நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like