1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்..! இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் அறிவிப்பு..!

Q

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (டிச.,14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

 

நாளை (டிச.,15)

* ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (டிச.,15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

 

டிசம்பர் 17ம் தேதி

* கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கு டிசம்பர் 17ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 18ம் தேதி!

* விழுப்புரம், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு டிசம்பர் 18ம் தேதி ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like