மக்களே கவனம்..! இன்று இந்த மாவட்டங்களில் மின்சார நிறுத்தம்...!
செப்டம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் பகுதிகள், துடியலூர் பகுதிகள் முழுவதும், மன்னம்பாளையம், வோலாபாளையம் மற்றும் அய்யப்ப நாயக்கன்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும்.
சென்னையில் மேடூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி பகுதியில் காலை முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.பல்லடம் பகுதியில் மார்க்கப்பட்டி,என்சிஜி வலசு,வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை பகுதியில் இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகிய இடங்களில் காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .