1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்..! வருகிற 15-ம் தேதி வரை 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

1

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை வெயில் சுட்டெரித்தது. வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் அதாவது கடந்த 2-ம் தேதி கோடை மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு நகரில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை கொட்டி தீர்த்தது. மெஜஸ்டிக், ராஜாஜிநகர், விஜயநகர், மைசூரு ரோடு, ராஜராஜேஸ்வரி நகர், கெங்கேரி, பட்டனகெரே, ஞானபாரதி, அத்திக்குப்பே, நெலமங்களா, தாசரஹள்ளி, சர்வதேச விமான நிலைய ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. கெங்கேரியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கரில் மழைநீர் புகுந்தது. 

இதனால் அந்த டேங்கரில் இருந்த பெட்ரோலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் நெலமங்களா, சர்வதேச விமான நிலைய ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

நள்ளிரவு நேரம் என்பதால் சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே ஓடின. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. புறநகர் பகுதியான எசரகட்டாவில் 40 மில்லி மீட்டரும், பெங்களூரு நகரில் 20 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. 

மாண்டியாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் காலை 9.30 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.  இங்கு அதிகபட்சமாக 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.பெங்களூருவில் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுகிறது. 

மாநிலம் முழுவதும் மேலும் நேற்று முதல் வருகிற 15-ம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்துள்ளது.  இதில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் கல்புரகி, விஜயபுரா, யாதகிரி, ஷிமோகா, உடுப்பி, சிக்கமகளுரு, தட்சிண கன்னடா மற்றும் குடகு உள்பட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஷிமோகா, குடகு, ஹாசன் மற்றும் மைசூர் மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் எனவும் பெங்களூருவில் மிதமான மழை பெய்ய வாய்யப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like