மக்களே கவனம்..! இன்று இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.