1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்..! வரும் 25-ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

1

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான சுழற்சி தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாகி உள்ள வளிமண்டல சுழற்சி நாளை  (23-ம் தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இரண்டு நாட்களில் வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதை தொடர்ந்து வரும் 25-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

வரும் 26,27-ம் தேதிகளில் கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 26,27-ம் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like