1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்..! இந்த 4 மாவட்டங்களில் டெங்கு பரவல் உச்சம்.!

1

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்து மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி வருகிறது.  டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர்  மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதில் உரையாற்றிய  அமைச்சர், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 6565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் திருநெல்வேலி, திருப்பத்தூர், தேனி மற்றும் மதுரை பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே மக்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Trending News

Latest News

You May Like