மக்களே கவனம்..! இந்த மாதம் மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது..!
செப்டம்பர் மாதத்தில் மொத்தமுள்ள 15 விடுமுறை நாட்களில் தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள் மற்றும் ஞாயிறு விடுமுறையும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறைகளும் அடங்கும்.
வங்கிகளுக்கான விடுமுறை பட்டியல் என்பது எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலின் படி, அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை பட்டியல் வேறுபட்டு இருக்கும். இந்த விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாநிலங்களுக்கு ஏற்ப பல்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களின் முழுமையான விவரங்கள் இருக்கும்.
செப்டம்பர் 1: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 4: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திருபவ திதி (கவுஹாத்தி)
செப்டம்பர் 7: விநாயகர் சதுர்த்தி (இந்தியா முழுவதும்)
செப்டம்பர் 8: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 14: இரண்டாவது சனிக்கிழமை, முதல் ஓணம் (கொச்சி, ராஞ்சி மற்றும் திருவனந்தபுரம்)
செப்டம்பர் 15: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 16 (திங்கட்கிழமை) - மிலாடி நபி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 17 (செவ்வாய்க்கிழமை) - இந்திர ஜாத்ரா: சிக்கிம் மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 18 (புதன்கிழமை) - ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி: கேரள மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 20: ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
செப்டம்பர் 22: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் (கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)
செப்டம்பர் 23 (திங்கட்கிழமை) - மாவீரர் தியாக தினம்: ஹரியானா மாநில வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 28: நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 29: ஞாயிறு விடுமுறை