1. Home
  2. தமிழ்நாடு

பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு...அமுலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்...

Q

1. பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
அக்டோபர் 1, 2023 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, பிறப்பு சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர், மாநகராட்சி, அல்லது பிற அரசு அமைப்புகளால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. டிஜிட்டல் முறையில் பதியப்பட்ட குடியிருப்பு முகவரி
பாஸ்போர்ட் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் முகவரி அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, முகவரி தகவல் பாஸ்கோடு மூலம் சேர்க்கப்படும், இது பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
3. பெற்றோரின் பெயர் நீக்கம்
பாஸ்போர்ட் புத்தகத்தில் பெற்றோரின் பெயர்கள் இனி அச்சிடப்படாது. இது தனியுரிமையை பாதுகாக்கும் முயற்சியாகும்.
4. பாஸ்போர்ட் சேவை மையங்களின் அதிகரிப்பு
அடுத்த 5 ஆண்டுகளில், அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களின் எண்ணிக்கை 442 லிருந்து 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்த உதவும்.
புதிய வண்ண-குறியீட்டு முறை :
அடையாளத்தை நெறிப்படுத்த பாஸ்போர்ட்டுகளுக்கு வண்ணக் குறியீட்டு முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெள்ளை நிற பாஸ்போர்ட்டுகள் - அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.
சிவப்பு நிற பாஸ்போர்ட்டுகள் - இராஜதந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நீல நிற பாஸ்போர்ட்டுகள் - சாதாரண குடிமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப செயல்முறை :
ஆன்லைன் விண்ணப்பம் -
பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதில் தேவையான தகவல்களை நிரப்பி, ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
ஆவணங்கள் - பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள், மற்றும் முகவரி சான்றுகள் போன்ற முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
நேர்காணல் மற்றும் போலீஸ் சரிபார்ப்பு - விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், நேர்காணல் மற்றும் போலீஸ் சரிபார்ப்பு நடைபெறும். இது பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன் கட்டாயமாகும்.

Trending News

Latest News

You May Like