பயணிகள் கவனத்திற்கு... நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுமையாக ரத்து..!

சென்னை கடற்கரை - எழும்பூர் நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளின் காரணமாக மின்சார ரயில்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக,
புறநகர் மின்சார ரயில் சேவையில் வரும் மார்ச் 9ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, மார்ச் 9ம் அன்று காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரை - தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் காலை 5:10 மணி முதல் 4:10 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/திருமால்பூர்/அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
பயணிகள் புதுப்பிக்கப்பட்ட நேரங்களின்படி தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.