1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் கவனத்திற்கு..! இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது..!

1

ரயில்வே அமைச்சகம் நீண்ட நாட்களாக கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனையடுத்து இன்று முதல் அதாவது ஜூலை 1 முதல் ரயில் பயண கட்டணங்களை உயர்த்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மெயில் மற்றும் விரைவு ரயில்கள்: ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட ரயில்கள்: ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு: ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி பயணிகள் மற்றும் குறைந்த தூர பயணிகளின் நலன் கருதி சில முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

புறநகர் ரயில் பயணச்சீட்டு  கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.

மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை.

500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை.

நீண்ட தூரப் பயணங்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்வு:

500 முதல் 1500 கி.மீ. தூரத்திற்கு: ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.

1501 முதல் 2500 கி.மீ. தூரத்திற்கு: ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

2500 முதல் 3000 கி.மீ. தூரத்திற்கு: ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, குளிரூட்டப்படாத பெட்டிகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு 1 பைசாவும், அனைத்து வகை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்கான கட்டணம் கி.மீட்டருக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Trending News

Latest News

You May Like