பயணிகள் கவனத்திற்கு..! நாளை முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய நடைமுறை..!

தினமும் 11 மணிக்கு தட்கல் டிக்கெட் ரிசர்வ் செய்யும் நேரம் தொடங்கும் நிலையில், 11.04 அல்லது 11.05 மணிக்குள் டிக்கெட் முடிந்துவிடுகிறது. போதாகுறைக்கு சில நேரங்களில் சர்வர் பிரச்சணை வேறு. இதனால் ஏஜண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்ய ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. அதன் படி வரும் 1ஆம் தேதி முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி IRCTC அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களது UserID (பயனாளர் கணக்கு) மற்றும் பாஸ்வேர்டு மூலம் IRCTC முன்பதிவு இணையதளத்துக்குள் சென்று My Account என்ற தலைப்பின் கீழ் Authenticate User என்பதை தேர்வு செய்து ஆதார் கார்டில் இருப்பது போல் பெயரை பதிவு செய்ய வேண்டும்.இதையடுத்து ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை பதிவு செய்ததும் IRCTC இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். மேலும், பயணாளர்கள் தங்களது ஆதார் கார்ட்டை இணையத்தள கணக்குடன் IRCTC கேட்டுக்கொண்டுள்ளது.
இனிமேல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடையாளம் கட்டாயமென்றும் தெரிவித்துள்ளது. ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்களுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏசி பெட்டிகளுக்கு காலை 10 முதல் 10.30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையிலும் முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.