பெற்றோர்களே கவனம்... போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம் !!

ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 27ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டும் இதேபோல சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போலியோ என்பது இந்தியாவிலிருந்து முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நோயாக இருப்பதற்கு, இந்த சொட்டு மருந்து விநியோகமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தடையின்றி உரிய நேரத்தில் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in