பெற்றோர்கள் கவனத்திற்கு..! இறுதித் தேர்வு அட்டவணை ரெடி..!

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. ஏப்ரல் 13ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு...
நாள் & தேதி | முற்பகல் 10 - 12 மணி | பிற்பகல் 2 - 4 மணி |
02.04.2024 & செவ்வாய் | மொழிப் பாடம் | - |
03-04-2024 & புதன் | ஆங்கிலம் | - |
05-04-2024 & வெள்ளி | கணிதம் | - |
08-04-2024 & திங்கள் | - | மொழிப் பாடம் (சிறுபான்மை மொழி) |
நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு...
நாள் & தேதி | பிற்பகல் 2 - 4 மணி |
02-04-2024 & செவ்வாய் | மொழிப்பாடம் |
03-04-2024 & புதன் | ஆங்கிலம் |
05-04-2024 & வெள்ளி | கணிதம் |
08-04-2024 & திங்கள் | மொழிப்பாடம் (சிறுபான்மை மொழி) |
10-04-2024 & புதன் | அறிவியல் |
12-04-2024 & வெள்ளி | சமூக அறிவியல் |