1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... மொத்தம் 14 விரைவு ரயில்கள் ரத்து..!

1

ஜோலார்பேட்டை டூ கே.எஸ்.ஆர் பெங்களூரு இடையே தற்காலிக கிர்டர் பொருந்தும் பணி, சோமாநாயக்கன்பட்டி மற்றும் ஜோலார்பேட்டை இடையில் சுரங்க வழித்தட கட்டுமானப் பணி ஆகியவை நடந்து வருகின்றன. இதையொட்டி சில ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண் 16204 கொண்ட திருப்பதி டூ எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் செப்டம்பர் 12, 13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் டூ திருப்பதி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 4.35 மணிக்கு புறப்படுவதாக இருக்கிறது. இது வரும் செப்டம்பர் 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் எண் 16021 கொண்ட எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் டூ மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இது செப்டம்பர் 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டது.

மேலும் ரயில் எண் 12658 கொண்ட கே.எஸ்.ஆர் பெங்களூரு டூ எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படுவதாக இருக்கிறது. இது செப்டம்பர் 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் ரயில் 12657 கொண்ட எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் டூ கே.எஸ்.ஆர் பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படுகிறது. இது செப்டம்பர் 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டது

கடைசியாக ரயில் எண் 07325 கொண்ட ஹூப்ளி டூ தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ஹூப்ளியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இது செப்டம்பர் 11ஆம் தேதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து ரயில்களும் தமிழகத்திற்கு வந்து செல்கிறது. குறிப்பாக திருப்பதி, பெங்களூரு செல்லும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. நடப்பு மாத இறுதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

Trending News

Latest News

You May Like