1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே கவனத்திற்கு..! நாளை இந்த 9 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

1

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மூர் மார்க்கெட் முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலும், சென்னை மூர் மார்க்கெட் முதல் திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலும், அரக்கோணம் முதல் சென்னை மூர் மார்க்கெட் வரை செல்லும் மின்சார ரயிலும், திருத்தணி முதல் சென்னை மூர் மார்க்கெட் வரை செல்லும் மின்சார ரயிலும் நாளை (செப்.13) ஒருநாள் மட்டும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி வரை செல்லும் மின்சார ரயிலும் நாளை (செப்.13) ஒருநாள் மட்டும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like