பயணிகள் கவனத்திற்கு..! ராக்போர்ட் மங்களூரு விரைவு ரயில்கள் சேவையில் முக்கிய மாற்றம்..!
ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவம்பர்1, 2, 3 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
அதன்படி, எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போர்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12653) ஆகியவை மேற்கண்ட நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.