1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..! சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

1

சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களுக்கான போக்குவரத்து தேவையும் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே புறநகர் ரயில், மெட்ரோ, மாநகர பேருந்துகள் ஆகியவை இருந்தாலும் டாக்ஸி, சொந்த கார்கள் மற்றும் பைக்குகளின் பயன்பாடு கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.

 

இந்த நெரிசலை சமாளிக்க பாலங்கள், புதிய சாலைகள் போன்றவற்றையும் மாநில அரசு அவ்வப்போது கட்டி வருகிறது. தவிர புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சோகம் என்னவெனில், இந்த கட்டுமான பணிகளால்தான் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரித்திருக்கிறது. சென்னை தற்போது சந்தித்திருக்கும் பெரிய பிரச்னை இதுதான். எனவே மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன.

நாளை முதல் கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர். சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

"சென்னை கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோதனை ஓட்டம் அடிப்படையில் வரும் 22.12.2024 முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும்.

1. அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் OMR சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகலங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி CPT பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் "U" திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும்.

2. கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம். 3.ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் அனுமதிக்கப்படும். பயணிகளை பின்புறத்தில் இறக்கிவிட இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும்" என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like